சென்னை ஐ.ஐ.டியில் முத்தப்போராட்டம். தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்

tamilisaiகேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் கல்லூரி மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்ததை அந்த பகுதி பா.ஜனதா இளைஞர் அணியினர் தட்டி கேட்டதோடு அந்த ஓட்டலையும் தாக்கி சேதப்படுத்தினர்

பாஜகவின் இந்த செயலை கண்டித்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்த இணையதளம் மூலம் கல்லூரி மாணவ மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் பொது இடங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் திரண்டு முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

வட மாநிலங்களில் நடந்து வந்த இந்த போராட்டம் தற்போது சென்னையிலும் நடக்க ஆரம்பித்துவிட்டது. சென்னை கிண்டி ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்சில மாணவ–மாணவிகள் திரண்டு கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறினார்கள். பொது இடத்தில் நடத்தப்பட்ட இந்த அநாகரீக போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நடந்துள்ள இந்த கலாச்சார சீர்கேட்டை கண்டித்து பா.ம.க., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஐ.ஐ.டி மாணவர்களை இன்று  தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை சந்திக்கிறார்.

இதுபற்றி தமிழிசை செளந்தர்ராஜன் கூறியதாவவது:–

ஐ.ஐ.டி. வளாகத்தில் சில மாணவர்கள் அன்பு முத்தம் என்ற பெயரில் நடத்திய இந்த அநாகரீக செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் கலாச்சாரத்தை சிதைக்கும் இந்த இழி செயலை அனுமதிக்கக்கூடாது. உன்னதமான மாணவ பருவத்தில் மாணவர்கள் தங்கள் சிந்தனையை திசை திருப்ப கூடாது. இதை கண்டித்தும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply