திருநாவுக்கரசர் தகுதியற்றவரா? கமல்-ராகுல் சந்திப்பு குறித்து தமிழிசை
முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட கமல்ஹாசனின் சமீபத்திய அரசியல் நடவடிக்கை பழம்பெரும் அரசியல்வாதிகளையே ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. இவற்றில் ஒன்றுதான் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கமல் சந்தித்தது. அதுவும் தமிழக பாஜக தலைவர் திருநாவுக்கரசருக்கே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தின் உச்சமாக உள்ளது.
இந்த நிலையில் கமல்-ராகுல் சந்திப்பு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியபோது, ‘ தமிழகத்தில் இருந்து ஒரு தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அவர் அரசியலையே கரைத்து குடித்த ஒரு அரசியல்வாதியா? ஐம்பது ஆண்டுகாலமாக மக்களோடு பின்னி பிணைந்த ஒரு தலைவரா? இவரை சந்தித்து ராகுல்காந்தியை தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெரிந்து கொண்டாராம்.
எனக்கு திருநாவுக்கரசரை பார்க்கும்போது தான் பாவமாக உள்ளது. தமிழக நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள திருநாவுக்கரசர் தகுதி அற்றவர் என்று நினைத்து தான் ராகுல்காந்தி, கமல்ஹாசனிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.
கமல்-ராகுல் சந்திப்பு குறித்த தமிழிசையின் இந்த கலாய்ப்பு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.