தமிழக இலங்கை மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் தமிழக மீனவர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று கொழும்புவில் தொடங்கிய தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் 19 மீனவர் பிரதிநிதிகளும், 9 அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் 20 மீனவ பிரதிநிதிகளும், மீன் வளத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் இரட்டைமடி வலைகளை தடை செய்வது, மீன் பிடிப்பதன் எல்லைகளை வரையறுப்பது போன்ற கருத்துக்களில் இரு தரப்பினர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் இன்று நடக்கவிருந்த தொடர் பெச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை. எனவே முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொல்வியில் முடிந்தது.
கடந்த 10ஆண்டுகளாக இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு பேச்சுவார்த்தை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.