ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

budgetதமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

* நடப்பாண்டில் 86,199 குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ரூ.125.70 கோடி நிதி ஒதுக்கீடு

* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 290 கள்ளர்- சீர்மரபினர் பள்ளிகளுக்கு ரூ.104.40 கோடி நிதி ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.207 கோடி நிதி ஒதுக்கீடு

* ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்திற்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,699 கோடி நிதி ஒதுக்கீடு

* பெண் குழந்தை பாதுகாப்பு, தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு ரூ.140.50 கோடி நிதி ஒதுக்கீடு

* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1644 கோடி நிதி ஒதுக்கீடு

* சமூகநலத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4512.32 கோடி

* சர்வ ஷிக்ச அபியான் திட்டத்திற்கு ரூ.2,329.15 கோடி நிதி ஒதுக்கீடு

* பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் முதல் மிதிவண்டி வரையிலான இலவச திட்டங்களுக்கு ரூ.2705 கோடி நிதி ஒதுக்கீடு

* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான உதவித்தாெகை திட்டத்திற்கு ரூ.582.58 கோடி நிதி ஒதுக்கீடு

* உயர்கல்வித்துறைக்கு ரூ.3678.10 கோடி நிதி ஒதுக்கீடு

373.82 கோடியில் 4 நகர்ப்புற குடிநீர் வழங்கல் மேம்பாடு திட்டங்கள் ஓராண்டில் செயல்படுத்தப்படும்.

* புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் மாநிலத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன.

* பள்ளிகளி் கழிவறைகள் அமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ள ரூ.333.61 கோடி நிதி ஒதுக்கீடு

* அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான மானியங்களுக்கு ரூ.387.12 கோடி நிதி ஒதுக்கீடு

* ரூ.487.45 கோடியில் 167.89 லட்சம் இலவச சேலைகள், 167.81 லட்சம் வேட்டிகள் வழங்கப்படும்.

* மாவட்ட அளவில் பல்வேறு பல்நோக்கு விளையாட்டு மையங்களுக்கு ரூ.25.12 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.

* பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில் உணவு வழங்க ரூ.103.15 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் நலன் துணைத் திட்டத்திற்கு ரூ.12,462 கோடி நிதி ஒதுக்கீடு

* சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான மொத்த நீர்த்தேக்க கொள்ளளவு 1,474 மில்லியன் கனஅடியிலிருந்து 2,542 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக 11,514.34 கோடி ரூபாய் நிதிக்குழுக்களின் நிதியுதவியாகக் கிடைக்கும்.

* சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்ட அறிக்கையை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தூய்மை தமிழகம் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

* தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1,423.38 கோடி நிதி ஒதுக்கீடு

* 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.

* சிறைச்சாலைத்துறைக்கு ரூ.282.92 கோடி நிதி ஒதுக்கீடு

* சுற்றுலாத்துறைக்கு ரூ.85.80 கோடி நிதி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.21.186.58 கோடி நிதி ஒதுக்கீடு

* பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி நிதி ஒதுக்கீடு

* தென் மாவட்டங்களில் 19 ஆயிரம் ஏக்கரில் நிலவங்கி அமைக்கப்படும்

* கல்வி உரிமைச் சட்டப்படி அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க ரூ.125.70 கோடி ஒதுக்கீடு

* இடைநிலைக் கல்வி இயக்கத் திட்டத்திற்கு ரூ.1139 கோடி ஒதுக்கீடு

* சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

* திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும், அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு

* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1000 கி.மீ சாலை அகலப்படுத்தப்படும்.

* 3000 கி.மீ சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

* நகர்ப்புறங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்த்துவதற்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதி வழங்க வீட்டுவசதி நிதியம் ஏற்படுத்தப்படும்.

* நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.11,820 கோடி நிதி ஒதுக்கீடு

* மீன்வளத்துறைக்கு ரூ.743.79 கோடி நிதி ஒதுக்கீடு

* நகர்புற வாழ்வாதாரத் திட்டங்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

* நீர்வள ஆதாரங்கள் துறைக்கு ரூ.3,406.69 கோடி ஒதுக்கீடு

* தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி ஒதுக்கீடு

* ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்க உள்ளது.

* இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்திற்காக ரூ.2705 கோடி நிதி ஒதுக்கீடு

* 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

* முதலீட்டாளர்கள் மாநாடும் மூலம் சுமார் ரூ.23,500 கோடி அளவுக்கு முதலீடுகள் இதுவரை வந்துள்ளன.

* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில்முனையம், தேசிய அளவிலான மையமாக மேம்படுத்தப்படும்.

* தொழிற்துறை வளர்ச்சிக்காக ரூ.2104.49 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஆரம்ப செயல்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு

* சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு 348.22 கோடி ஒதுக்கீடு

* வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு

* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு

* பழைய பேருந்துகளை மாற்றி 2000 புதிய பேருந்துகளை வாங்க மூலதன நிதி ரூ.150 கோடி வழங்கப்படும்.

இணையதளம் மூலம் ரேசன் கார்டு முகவரி மாற்றம்

* இணையதளம் வழியாக ரேசன் கார்டு முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு.

* மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரி செய்யப்படும்.

* தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வரும் 64 காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.

* காவல்துறைக்கு ரூ.6102.95 கோடி நீதி ஒதுக்கீடு

* தமிழக அரசு கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகை ரூ.21,215.67 கோடி

* அடுத்த நிதி ஆண்டில் அரசு செலுத்த வேண்டிய வட்டித்தொகை ரூ.24,185.86 கோடியாக உயரும்.

* 2018-19ம் ஆண்டில் தமிழக அரசு செலுத்தும் வட்டித்தொகை ரூ.27,571.88 கோடியாகிவிடும்.

* நடப்பாண்டு இறுதியில் முதலாவது சுரங்க வழியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

* வறுமை ஒழிப்புத்திட்டத்துக்கு ரூ.355.81 கோடி நிதி ஒதுக்கீடு

* 2016-17ம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.6000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும்.

* 100 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.

* 27.50 லட்சம் ஏக்கர்கள் 2016-17 ல் பயிறு வகை விளைச்சலுக்கு கொண்டு வரப்படும்.

* 2016-17ல் 9.80 லட்சம் மெட்ரிக் டன் பயிறு உற்பத்தி செய்ய இலக்கு.

* 12,524 ஊராட்சிகளில் 79,394 குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

* கறவை மாடு வாங்குவதற்கான நிதி 30,000 ரூபாயில் இருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு

* கால்நடைப் பராமரிப்புத்துறைக்கு 1,188.17 கோடி ஒதுக்கீடு

* இலவச அன்னாதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* 104.50 கி.மீ நீளமுள்ள 2 வழித்தடங்களை உள்ளடக்கியதாக 2வது ரயில் திட்டம் இருக்கும்.

* ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.

* இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.182.33 கோடி ஒதுக்கீடு

* மதுரையில் பால்பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.

* கைத்தறித்துறைக்கு ரூ.1,129.74 கோடி, கதர்த்துறைக்கு ரூ.174.27 கோடி ஒதுக்கீடு

* ரூ.373.82 கோடியில் 4 நகர்ப்புற குடிநீர் வழங்கல் மேம்பாடு திட்டங்கள் ஓராண்டில் செயல்படுத்தப்படும்.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.1220.28 கோடி நிதி ஒதுக்கீடு

* வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுற்றுச்சூழல், வனத்துறைக்கு ரூ.652.78 கோடி நிதி ஒதுக்கீடு

* தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

* சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை மேம்படுத்த அரசு ஆர்வம்காட்டும்

* தோட்டக்கலைத்துறைக்கு ரூ.518.19 கோடி நிதி ஒதுக்கீடு

* இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தை காக்க மாநில அரசின் பங்காக ரூ.239.51 கோடி ஒதுக்கீடு

* நெல்லை-கொல்லம் நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.

* சாலை மேட்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் உதவி திட்டங்கள், மானியங்களுக்காக ரூ.68,211.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கடலூர் மாவட்டத்தில் மேற்காெள்ள ரூ.140 கோடி ஒதுக்கீடு

* அடுத்த 5 ஆண்டுகளில் 13000 மெகாவாட் அனல் மின்சாரம், 2500 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 3000 மெகாவாட் சூரிய மின்சக்தியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.

* பண்ணை இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் கல்வி உதவித்தொகைக்கு ரூ.208 கோடி ஒதுக்கீடு

* திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி

* 2000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி கடன் வழங்கப்படும்.

* தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 2 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.

* ரூ.13,856 கோடி மின்சாரத்துறைக்கு மானியமாக வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்துறைக்கு ரூ.1295.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

* இலங்கை அகதிகளுக்காக ரூ.105.98 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.396.74 கோடி ஒதுக்கீடு

* 4 லிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக ரூ.703.16 கோடி ஒதுக்கீடு

* உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

* 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும்.

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்

* தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

* 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ஆண்டுக்கு ரூ.1607 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

* உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு

* சமூக நலத் துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு

* 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடியதால் அரசுக்கு ரூ.6,636.08 கோடி இழப்பு

* மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* இந்த நிதியாண்டில் வணிக வரித்துறை வருவாய் ரூ.67,629.45 கோடியாக இருக்கும்.

* அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி

* வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாகச் செயல்படும்.

* தொலைநோக்கு திட்டத்தைச் செயல்படுத்த 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* முதல்வரின் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* அடுத்த ஓராண்டில் நபார்டு வங்கி உதவியுடன் சாலை மேம்பாடு பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

* ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கி வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

* ரூ.52.64 கோடியில் ஆற்றங்கரையோரங்களில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

* ரூ.422 கோடியில் 2673 வீடுகள் காவலர்களுக்குக் கட்டப்படும்.

* தமிழகத்தின் வருவாய்த் துறை பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி, மொத்த நிதி பற்றாக்குறை ரூ.40533.84 கோடி

* அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* அடுத்த ஓராண்டில் ரூ.420 கோடியில் சூரிய ஒளி மின்வசதி கொண்ட 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டம்.

* அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply