அமைச்சர் ஆகிறார் மாஃபா. பாண்டியராஜன்

அமைச்சர் ஆகிறார் மாஃபா. பாண்டியராஜன்maffa

தமிழக அமைச்சரவை நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் பதவியை இதுவரை வகித்து வந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பால்வளத்துறை இலாகா கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பென்ஜமின் ஊரக தொழில் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply