மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் கூறிய குட்டிக்கதைகள்.

jaya 3
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழகத்துக்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கு பெரும் முயற்சி செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் இந்த விழாவில் தொடர்ந்து பேசிய முதல்வர் அணையின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ஒரு குட்டிக் கதையாக, விளக்கிக் கூறினார். முதல்வர் கூறிய குட்டிக்கதை இதுதான்.
jaya 2ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோர அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சீடரைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடர், திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது என்றார்.

இதே கேள்வியை மற்றொரு சீடரிடம் கேட்டபோது, துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், கரையைப் போல உறுதியாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும் என்றார். இவற்றைக் கேட்ட குரு, சில நேரங்களில் அலைகளாய் இரு, சில நேரங்களில் கரையாய் இரு என்று சொன்னார்.

இந்த கதையில் வருவதைப் போல, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எனது தலைமையிலான அரசு அலைகளாகவும், கரையாகவும் இருந்து செயல்பட்டதால் தான் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்தது என்று முதல்வர் குறிப்பிட்டார்.

jaya 4வாழ்வளித்தவர்களை அழிக்க நினைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி எனக் குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதை ஒரு கதையின் மூலம் விளக்கினார்.

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு, பணம், செல்வம், தங்கம், வைரம் என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை. உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது. ஆனால், ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. இருப்பினும், அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை. உடனே கடவுள், இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை, எனக்கு அந்த விரல் வேண்டும் என்றார். இதைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்து விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

jaya1

Leave a Reply