தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா. ராகுலுடன் மோதலா?

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் திடீரென நேற்று ராஜினாமா செய்ததால் தமிழக காங்கிரஸ் கட்சியினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
gnanasekaran resigns
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஞானதேசிகன் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா  கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அவர் சோனியாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், ”கடந்த 3 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க உதவும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தமிழக காங்கிரஸ் தலைவராக சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி” என எழுதியுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில்,  தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் அடையாள அட்டையில் ஜி.கே.மூப்பனார் படத்தை போடக்கூடாது என்று ராகுல்காந்தி கறாராக கூறியதால் அதிருப்தி அடைந்த ஞானசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.  

Leave a Reply