தேர்தலுக்கு பயந்து பின்வாங்கும் தமிழக தலைவர்கள். ராகுல் அதிர்ச்சி

14காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க முடிவு செய்திருப்பதால் ராகுல்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழகத்தின் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலே காங்கிரஸ் கட்சி வெற்றிகாக கடுமையாக போராட வேண்டிய நிலையில் கூட்டணி எதுவும் இன்றி போட்டியிட்டால் தோல்வி அடைவதோடு, டெபாசிட் காலியாகும் அபாயம் இருப்பதால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். ப.சிதம்பரம் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களைவை உறுப்பினர் பதவியை பெறுவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை சிவகெங்கை தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதுபோல ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஆகியோர் போட்டியிட விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். மாநிலத்தலைவர் என்ற பதவியில் இருப்பதால் வேறு வழியின்றி ஞானதேசிகன் மட்டும் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசன் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நேற்று பத்திரிகையாளர்களிடம் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பின்வாங்கல் குறித்து ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். முக்கிய தலைவர்கள் அனைவரும் வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என அவர் வலியுறுத்தி வருவதால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

 

Leave a Reply