சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்ட ஜெயலலிதா விரைவில் முதல்வர் பதவியை ஏற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதாவை தமிழக டிஜிபி அசோக்குமார் மற்றும் சென்னை நகர காவல்துறை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் போயஸ் கார்டன் சென்று சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பதவியேற்பு விழாவை எப்பொழுது நடத்தலாம் என்றும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இவர்கள் இருவரும் ஜெயலலிதாவிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ஜாமீன் பெற்று போயஸ் கார்டன் திரும்பியதில் இருந்து எந்த அதிகாரியையும் சந்திக்காமல் இருந்த ஜெயலலிதா தற்போது நிரபராதி என தீர்ப்பு வெளியான பின்னர்தான் அதிகாரிகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் வருமானத்திற்கு உரிய சான்றுகளை ஜெயலலிதா சமர்ப்பித்துவிட்டதால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் குமார் பேட்டியளித்துள்ளார்.