அம்மா உணவகத்திற்கு திடீர் கட்டுப்பாடு. தேர்தல் ஆணையம் உத்தரவு.

amma unavagamநாடு முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் ஒழுங்குமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைமுறையின் முதல் கட்டமாக அம்மா உணவகம் மாற்றும் அம்மா குடிநீர் பாட்டிலில் உள்ள முதலமைச்சரின் படம் அகற்றவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மா என்பது பொதுவான பெயர் என்பதால் அந்த பெயர் இருப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

மேலும் சென்னையில் ஓடும் மினி பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருப்பதாக புகார் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அகில இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுரையை கேட்டுள்ளோம்.

மேலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தவேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து மொத்தமாக ‘அவுட் சோர்சிங்’ மூலம் வாக்களிக்கும்படி தகவல் அனுப்பினால் அந்த செலவு கணக்கு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கூறினார்.

Leave a Reply