தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? ராஜேஷ் லக்கானி தகவல்

rajeshதமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை விறுவிறுப்பாக நடத்தி வரும் நிலையில் நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணி வரை 6,551 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழகத்தின் இறுதி வாக்களர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதன்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5.82 கோடி என்றும் இதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி என்றும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி என்றும், திருநங்கை வாக்காளர்கள் 4,720 பேர் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வயது வாரியான வாக்காளர் பட்டியலையும் அவர் பிரித்து வெளியிட்டுள்ளார்.

வயது வாரியான வாக்களர் எண்ணிக்கையின் விபரம் பின்வருமாறு:

18 லிருந்து 19 வயது வாக்களர் எண்ணிக்கை 21 லட்சத்து 5 ஆயிரத்து 344

20 லிருந்து 29 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்து 288

30 லிருந்து 39 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சம்

40 லிருந்து 49 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சம்

50 லிருந்து 59 வயது வாக்களர் எண்ணிக்கை 87 லட்சம்

60 லிருந்து 69 வயது வாக்களர் எண்ணிக்கை 56 லட்சம்

70 லிருந்து 79 வயது வாக்களர் எண்ணிக்கை 26 லட்சம்

80 வயதிற்கு மேலுள்ள வாக்களர் எண்ணிக்கை 7 லட்சத்து 40 ஆயிரம்

மொத்த வாக்களர் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர்.

Leave a Reply