இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு. தமிழக மீனவர் பலி. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக ஆட்சியாளர்கள் இதுகுறித்து மத்திய அரசு பல ஆண்டுகளாக கடிதம் மட்டுமே எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்களுக்கு இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் ராமேஸ்வரம் மீனவ்ர் ஒரு பரிதாபமாக பலியானார். இன்னொரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
எல்லை தாண்டினால் தான் இலங்கை கடற்படையினர் தொந்தரவு இருக்கும் என்று நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட ஆதம்பாலம் என்ற இடத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் அந்த இடம் இலங்கை அரசுக்கு சொந்தமானது என்று கூறி துப்பாக்கியால் சுட்டனர், இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த டிட்டோ என்ற மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.