மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் கவர்னர்களை மாற்ற மத்திய அரசு பரிலீத்து வந்தது.
இதனால் சில மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யும்படி மத்திய அரசு வற்புறுத்தி வந்தது. இதையடுத்து உத்தரபிரதேச மாநில கவர்னர் ஜொஷி, சத்தீஷ்கர் மாநில கவர்னர் சேகர் தத் ஆகியோர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை குடியரசு தலைவருக்கு அன்ப்பினர்.
இந்நிலையில் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் உள்பட சில கவர்னர்கள் ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தென்மாநிலத்தை சேர்ந்த மூன்று கவர்னர்களான ரோசய்யா, ஷீலா தீட்சித், பரத்வாஜ் ஆகியோரை ராஜினாமா செய்யுமாறு கடிதம் மூலம் உத்தரவிட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக கவர்னர் ரோசய்யா உள்பட மூன்று கவர்னர்களும் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யப்படலாம் என கூறப்படுகிறது.