டாஸ்மாக்கில் ஸ்வைப் மிஷின். ‘குடி’மக்களுக்கு அரசு புதிய வசதி
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து டாஸ்மாக் வியாபாரம் சரிந்துவிட்டது. புதிய ரூ.2000 நோட்டுக்களுக்கு சில்லரை கொடுக்க முடியாததால் டாஸ்மாக் விற்பனையாளர்களும், குடிமக்களும் திணறி வருகின்றனர்.
‘குடி’மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேய்க்கும் இயந்திரங்களை நிறுவ, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஸ்வைப் வசதி நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகிகின்றன.
டாஸ்மாக் கடைகளீல் சில்லரை தட்டுப்பாடு காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சராசரியாக, நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி வரை விற்பனை பாதித்துள்ளதாகவும், மற்ற நாட்களில் ரூ.6 கோடி வரை வியாபாரம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.