ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு. வரும் 30ஆம் தேதி ஓட்டல்கள் சங்கம் வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு. வரும் 30ஆம் தேதி ஓட்டல்கள் சங்கம் வேலைநிறுத்தம்

மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இந்த வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது. இதன் காரணமாக இம்மாதம் 30ம் தேதியன்று வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஏசி வசதி உள்ள உணவகங்களுக்கும் வரி விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், உணவுப் பொருள் விலை அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனை எதிர்த்து, வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றன,’’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply