தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு. சோதனை முயற்சி விரைவில் அறிமுகம்.

smart ration cardதமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டே ரேஷன் கார்டுகள் காலாவதி ஆகிவிட்டபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதில் உள்தாள் ஒட்டி பொதுமக்களுக்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதேபோல் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகமாக இருப்பதால்தான் இந்த நடைமுறை இருப்பதாகவும், விரைவில் ஒருசில மாவட்டங்களில் சோதனை முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை தயாரிக்கும் திட்டப்பணியை ஆம்னி அகேட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

 இது குறித்து தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“கியூ. ஆர் முறையில் கொண்டு வரப்படவுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்துக்கு ரூ.318 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சோதனை முறை திட்டம் முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப் படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் படும். தற்போதுள்ள ரேஷன் கார்டில் பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்படுவது போல் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உணவு பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்பட்டு ரசீது போல் வழங்கப்படும். அல்லது செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர், தலைவி புகைப்படங்கள் இடம் பெறுவது குறித்து அரசு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply