சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் நேற்று திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு திடீரென ஏராளமான கூட்டம் கூடியது. தமிழக அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிறை முன்பு கூடி இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னுடைய அனுமதியின்றி தன்னை பார்க்க வருபவர்கள் யாரையும் அனுப்ப வேண்டாம் என சிறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளதால், அவரை பார்க்க வருபவர்களை சிறையின் உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதிமுக அமைச்சர்கள் துண்டு சீட்டை கொடுத்து அனுப்பியும் ஜெயலலிதா யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறியதால் அனைத்து அமைச்சர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களை முதல்வர் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்