தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இந்த துறை பொறுப்புகளை உணவுத்துரை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை இலாகா மாற்றம் செய்ய ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவிடப்பட்டுள்ளார். இதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள செந்தூர் பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவரது இலாகா பொறுப்பு உணவு அமைச்சராக உள்ள காமராஜூக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், செந்தூர்பாண்டியன் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதல்வரின் பரிந்துரையும் ஏற்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.