சமூக விரோதிகள் யார்? ரஜினியை மறைமுகமாக தாக்கிய கமல்
உலக நாயகன் என்று கூறப்படுபவரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திக்க நேற்ற் பெங்களூரு சென்றுள்ளார். பெங்களூர் புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், மக்கள் பிரதிநிதியாக பெங்களூரு செல்வதாகவும், சினிமா குறித்து பேசப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ரஜினியின் காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது குறித்து, இரு மாநில திரைப்பட சங்கங்கள் பார்த்துக் கொள்ளூம் என்றும் இதுகுறித்து தான் கர்நாடக முதல்வரிடம் பேசப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் பலியானவர்கள் சமூக விரோதிகள் கிடையாது என்றும் அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதி தான் என்றும் தமிழக மக்கள் போராட்டங்களை நிறுத்த மாட்டார்கள். நிறுத்தவும் கூடாது என்றும் ரஜினியை கமல்ஹாசன் மறைமுகமாக தாக்கினார்
மேலும் இன்றுமுதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திமுக மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்தது வரவேற்கத்தக்க முடிவு என்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிறந்தநாள் முடிந்தும் பலமுறை வாழ்த்து கூறியுள்ளேன், அதேபோல் இந்தமுறையும் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்