தீபா புதுக்கட்சி, ஓபிஎஸ் எழுச்சி பயணம், தீபக் அதிரடி. பரபரப்பில் தமிழகம்

தீபா புதுக்கட்சி, ஓபிஎஸ் எழுச்சி பயணம், தீபக் அதிரடி. பரபரப்பில் தமிழகம்

தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக பரபரப்பில் இருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் பரபரப்பு குறைந்து அமைதி காணப்படும் சூழல் உள்ளது. ஆனால் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் அதிரடி அறிவிப்பு காரணமாக மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று அவர் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் செய்யவுள்ளார். ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்கே நகரில் இருந்து இந்த பயணத்தை அவர் ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை சசிகலா ஆதரவாளராக இருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென அதிமுக தலைமைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுக துணைப்பொதுச்செயலாலர் பதவிக்கு டிடிவி தினகரன் தகுதியற்றவர் என்றும், இந்த பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் சரியானவர் என்றும், போயஸ் தோட்டத்துவீடு தனக்கும் தனது சகோதரி தீபாவுக்கும் மட்டுமே சொந்தம் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேற்கண்ட பரபரப்பு காரணமாக மீண்டும் தமிழகத்தில் பிரேக்கிங் நியூஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply