2வது தமிழக பிரிமியர் லீக் போட்டியில் வீரர்கள் மாற்றம்
ஐபிஎல் போட்டி போன்றே தமிழக பிரிமியர் லீக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி அணி சென்னை அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இந்நிலையில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், டுட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் என எட்டு அணிகள் பங்குகொள்ளும் இந்த போட்டி தொடரின் இரண்டாவது தொடர் 2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் தற்போது 37 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 8 அணிகளும் 120 வீரர்களை தக்க வைத்துள்ளது. நடப்பு சாம்பியனான தூத்துக்குடி அணி 19 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டது. யாரையும் விடுவிக்கவில்லை.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு ரஜில் அப்துல் ரகுமான், நிர்மல் குமார், வாசுதேவன், ஷிபிஜவகர் ஆகிய 4 வீரர்களை விடுவித்துள்ளது.
மதுரை அணி அதிகபட்சமாக 9 வீரர்களை விடுவித்து 10 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி முன்னணி வீரரான ஷாருக்கான் உள்பட 6 வீரர்களையும், கோவை அணி 4 வீரர்களையும், திருவள்ளூர் அணி 3 வீரர் களையும், திண்டுக்கல் அணி 5 வீரர்களையும், காரைக்குடி காளை 6 வீரர்களையும் விடுவித்தது.
காஞ்சி வாரியர்ஸ் 13 வீரர்களையும், கோவை 15 வீரர்களையும்,திருவள்ளூர் அணி 16 வீரர்களையும், திண்டுக்கல் அணி 16 பேரையும், காரைக்குடி காளை 14 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டது.