போராட்டத்தில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த தமிழகம்
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் உலகின் கவனத்தை கவர்ந்தது. ஒரு போராட்டத்தால் மத்திய மாநில அரசுகள் இறங்கி வந்து ஒரு அவசர சட்டம் நிறைவேறும் அளவிற்கு இந்த போராட்டத்தில் வீரியம் இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றில் அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம் தமிழகம் தான் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய மாநிலங்களில், அரசியல், விவசாயம், தொழிலாளர்கள் பிரச்சனைகள் மட்டுமின்றி சமூகக் காரணங்கள், மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் எனப் பலவிதமான போராட்டங்கள் தமிழகத்தில்தான் அதிகம் நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 20,450 போராட்டங்கள் நிகழ்ந்துள்ளது.
இவற்றில் மாணவர்கள் போராட்டம் 734, சாதி, மத போராட்டங்கள் 1300, தொழிலாளர் போராட்டங்கள் 1940, அரசு ஊழியர்கள் போராட்டங்கள் 3461 மற்றூம் அரசியல் கட்சிப் போராட்டங்கள் 8,312 என அதிக போராட்டங்கள் நடத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் பெறுகின்றது.