சாவில் கூட அரசியல் செய்யும் தமிழிசைக்கு குவியும் கண்டனங்கள்

சாவில் கூட அரசியல் செய்யும் தமிழிசைக்கு குவியும் கண்டனங்கள்

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி கேரளாவில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவருக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை தராததால் எட்டு மணி நேரம் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இருந்து பரிதாபமாக பலியானார்.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் நடந்த தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், மறைந்த முருகனின் குடும்பத்தை தத்து எடுத்து கொண்டதோடு, அவருடைய இரண்டு குழந்தைகளின் படிப்புக்கான முழு செலவையும் தனது கட்சி ஏற்கும் என்று அறிவித்தார். மேலும் முருகனின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கினார்.

இந்த நிலையில் ஒரு தமிழரின் உயிரை காப்பாற்றிய தவறிய கேரள அரசை ஏன் யாரும் பதவி விலக சொல்லி கோரிக்கை வைக்கவில்லை. குறிப்பாக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மெளனமாக இருப்பது ஏன்? என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மரணத்தில் கூட அரசியல் செய்யும் தமிழிசைக்கு டுவிட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply