சட்டசபை வளாகத்தில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கைது: பெரும் பரபரப்பு
சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம் செய்த தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சட்டமன்றத்தில் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டசபை வளாகத்தில் அன்சாரி தர்ணா போராட்டம் நடத்தினார். யாருக்கோ பயந்துகொண்டு வாக்கு வங்கியை இழந்து கொண்டிருக்கிறது அதிமுக என்றும் அவர் தெரிவித்தார்.
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஏற்கனவே காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது என்.பி.ஆருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது