தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு ரசாயன வர்ணம்: பரபரப்பு தகவல்
ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் பழமை மாறாமல் ரசாயன கலவை வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு ரசாய வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக பெரிய கோவில் கோபுரத்தில் உள்ள பறவைகள் எச்சம் மற்றும் படிந்துள்ள பாசிகளை அகற்றும் பணி நடைபெற இருப்பதாகவும் அந்த பணி முடிந்தவுடன் ரசாயன வர்ணம் பூசும் பணி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.