தஞ்சை அருகே உள மேம்பாலம் என்ற கிராமத்தில் காதுகேளாதோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இந்த ஆண்டு 21 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். இவர்கள் அனைவருமே தேர்வில் தோல்வி அடைந்திருப்பதை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் அனைவரும் தோல்வி அடைந்திருப்பது குறித்து விசாரணை நடத்த தஞ்சை மாவட்ட கல்வித்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததே அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெறாததன் காரணம் என இங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேபோல் தர்மபுரியில் உள்ள காதுகேளாதோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள் 24 பேரில் 2பேர் மட்டுமே பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீது 22 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி தோல்விக்கு தமிழக அரசுதான் காரணம் என மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் நம்புராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.