தஞ்சாவூர்: தஞ்சை, மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு காலை, 7.30 மணிக்கு, லட்ச ராமநாம ஜெபத்துடன் வழிபாடு துவங்கியது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம், வறுமை கடன் தொல்லைகளை நிவர்த்தி செய்யும் தேங்காய் துருவல் அபிஷேகம் நடந்தது. பிறகு, ஆஞ்சநேயருக்கு கோதுமை, உளுந்து, பயறு வகைகள், துவரை, கொள்ளு, காராமணி, எள், கொண்டைக்கடலை ஆகிய நவதானியங்களால் அலங்காரம் நடந்தது. மாலையில் அல்லல் போக்கும், 18 அமாவாசை வலம் வரும் நிகழ்ச்சியும், 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.