‘புலி’ படத்திற்கு தடை கேட்ட வழக்கு. நீதிபதி அதிரடி உத்தரவு

‘புலி’ படத்திற்கு தடை கேட்ட வழக்கு. நீதிபதி அதிரடி உத்தரவு
puli puli
இளையதளபதி விஜய் நடித்து, நாளை மறுநாள் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ‘புலி’ படம் ரிலீஸுக்கு எந்தவித தடையும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர் எனபவர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற தன குறும்படத்தின் கதையை தழுவி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீடு வழங்கக் கோரியும் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 22-ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் நடித்த ‘புலி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தஞ்சை நீதிமன்றத்தில் கடந்த வாரம் அன்பு ராஜசேகர் மற்றொரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

‘புலி’ படத்தின் ரிலீஸுக்கு எவ்வித தடையும் இல்லாததால், அந்த படம் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply