தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 30
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Typist (தட்டச்சர்)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கித்தில் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொன்றில் உயர்நிலையும், மற்றொன்றில் கீழ்நிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Electrician Grade -II
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Wireman Grde-II
சம்பளம்: 5,200 – 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் வேண்டும்.
பணி: Bolierman, Grade – II
சம்பளம்: 5,200 – 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Operator தொழிற்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Plumber
சம்பளம்: 5,200 – 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Plumbing தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Draughtsman (Civil)
சம்பளம்: 5,200 – 20,200
தகுதி: Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை The Finance Officer, Tamilnadu Veterinary and Animal Science University, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Veterinary and Animal Science University, Madhavaram Milk Colony, Chennai – 600051.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.