ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு?

TASMACநாளை வரவிருக்கும் புத்தாண்டை ஒட்டி ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய, டாஸ்மாக் கடைகளுக்கு, அதன் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டார்கெட்டை இன்று முதல் நாளை இரவுக்குள் முடிக்க காலநிர்ணயம் நியமித்துள்ளதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வழக்கமான நாட்களை விட அதிகமான மதுபானங்களை விற்பனையாகும். இதேபோல் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரூ.130 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைவாக, சுமார் ரூ.100 கோடிக்குதான் மதுபானங்கள் விற்பனையானது.

மேலும் நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப்புகள் என பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளோடு மது விருந்து நடைபெறும். நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மது விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.

இந்நிலையில், இன்று இந்தாண்டின் (2014) கடைசி தினம் என்பதாலும், நாளை புத்தாண்டு (2015) பிறப்பதாலும் இந்த இருதினங்களிலும் சேர்த்து ரூ.250 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளுக்கு, அதன் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் நாளொன்றுக்கு சுமார் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அனைத்து டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply