டாஸ்மாக் நேரம் திடீர் மாற்றம். தாலிக்கு தங்கம், விவசாய கடன் குறித்தும் முதல்வர் உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 6வது முறையாக மீண்டும் முதல்வராக காலை பதவியேற்றார். முதல்வரான பின் அவர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவற்றில் ஒன்று டாஸ்மாக் கடைகள் இனி நண்பகல் 12 மணிக்கு மேல்தான் திறக்கப்படும். மேலும் பள்ளி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகேயிருக்கும் 500 மதுக்கடைகடைகளை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் முதல்வர் இந்த உத்தரவை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்திலும் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். அதுமட்டுமின்றி 100 யூனிட் மின்சாரம், விவசாயக்கடன் ஆகியவற்றிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.