தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மல்லி விதை – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 5 – 6
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
வதக்கி அரைக்க:
தேங்காய் – 3 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
தாளிக்க:
பட்டை – 2 துண்டு
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் எண்ணெயில் தேங்காயையும், சோம்பையும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வதங்கவிடவும்.
சிக்கன் நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரிபார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.