ரூ.98 கோடியில் சொந்த வீடு வாங்கிய டாடா சேர்மன்!
டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் ரூ.98 கோடி மதிப்பிலான சொந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
இந்த குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகளாக குத்தகைக்கு குடியிருந்து வந்தனர்.
28 மாடி கட்டிடத்தின் 11வது மற்றும் 12வது மாடியில் உள்ள இந்த குடும்பம் அந்த வீட்டிற்கு மாத வாடகையாக ரூ.20 லட்சம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.