வெளிநாடுகளில் உயர்கல்வி பயில ஜே.என் டாடா கல்வி உதவித்தொகை

jn-tata-endowment-scholarship

வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான J.N.TATA ENDOWMENT LOAN SCHOLARSHIP -ன் கீழ் 2015-16ம் ஆண்டு பயன் பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:

இந்தியர்களாக இருக்க வேண்டும் மற்றும் இந்திய பல்கலைக்கழகத்தில் நல்ல மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆராய்ச்சி, சிறப்பு படிப்பு அல்லது பயிற்சிக்காக வருங்காலத்தில் வெளிறாடு செல்ல திட்டமிட்டுள்ள 45 வயதிற்கு உட்பட்ட தொழில் துறையில் பணியாற்றி வருபவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பங்களின் பரிசீலனைக்கும் பின் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களின் முன் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுர்.

நேர்முகத்தேர்வு 2015 மார்ச் மற்றும் ஜூன் வரையிலான காலத்தில் மும்பையில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. இதனை நேரில் அல்லது The J.N Tata Endowment என்ற பெயரில் டிடி அல்லது மணி ஆட்ராக எடுத்து கோரிக்கை கடிதத்துடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 16.2.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி நாள் 9.3.2015

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள www.dorabjitatatrust.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply