சூர்யாவின் ’24’ படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு
சூர்யா நடித்த ’24’ திரைப்படம் உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆன நிலையில் தற்போது இந்த படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஒரு தயாரிப்பாளராக சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவரை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி சூர்யாவுக்கு மட்டுமின்றி இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த டைம் மிஷின் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவின் முதல் வில்லத்தன நடிப்பு, விக்ரம்குமாரின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான இசை ஆகியவை இந்த படத்தின் பலம் என்பது குறிப்பிடத்தக்கது.