திடீரென கதறி அழுத நெகிழ்ச்சியான சம்பவம்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், குணமானவர்கலை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவர் ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. ஒரு பொது சேவையாக அவர் இதை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து குணமான ஒரு கொரோனா நோயாளி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மருத்துவமனைக்கு வந்தார் அப்போது திடீரென மருத்துவர்களும் செவிலியர்களும் அந்த குணமான நோயாளியின் உறவினர்களும் அவருக்கு கை தட்டி ஆரவாரம் செய்தனர்
அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு காசோலையாக அளித்துள்ளனர். தனக்கு கிடைத்த வரவேற்பும் கிடைக்கப்பட்ட காசோலையும் பார்த்து அவர் ஆனந்த கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
ஸ்பெயின் நாட்டின் டாக்சி ஓட்டுநர் சங்கம் இந்த வீடியோவை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோவை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
https://www.youtube.com/watch?v=tKMG_V_vRn0