அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்குவது டி.சி.எஸ். நிறுவனம்தான். கருத்துக்கணிப்பில் தகவல்
அமெரிக்கார்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டினார். அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது ஆனால் அமெரிக்கர்களுக்கு வேலை கொடுப்பதில் இந்திய நிறுவனம்தான் முதல் இடத்தில் உள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்த பட்டியல் ஒன்றை டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்த பட்ட்டியலில் இந்தியாவை சேர்ந்த டி.சி.எஸ். என்ற நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இதே நிறுவனம்தான் அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்குவது மட்டுமின்றி தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளை வழங்குவது, அவர்களின் வேலையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது ஆகியவற்றில் டி.சி.எஸ். நிறுவனம் நன்கு செயல்பட்டு வருவதாகவும் டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
டி.சி.எஸ். நிறுவனத்தை அடுத்து செயின்ட் கோபெயின், வேலியோ, டி.எச்.எல் போன்ற இந்திய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: TCS certified as top employer in US for 2nd straight year