டி.சி.எஸ் ஊழியர்களுக்கு வட்டியின்றி 3 மாத சம்பளம் முன்பணம்.

டி.சி.எஸ் ஊழியர்களுக்கு வட்டியின்றி 3 மாத சம்பளம் முன்பணம்.
tcs
சென்னையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தனியார் ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை முன்பணமாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முன்பணத்திற்கு ஊழியர்கள் எவ்வித வட்டியும் கட்ட தேவையில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் ஏராளமான ஐ.டி.நிறுவனங்களை மூழ்கடித்தது. இதனால் பெரும் பாதிப்புகளை ஐ.டி. நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் சந்தித்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் சப்போர்ட் மற்றும் சர்வீஸ் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாகவும் இதுமட்டுமின்றி இலவச மருத்துவ முகாம்கள், இலவச பேருந்து சேவை, பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வழங்கவும்  டி.சி.எஸ்.முடிவு செய்துள்ளது.

மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் வழங்குவதற்காக ரூ.1,100 கோடியும், நேரடி நிவாரண உதவிக்காக ரூ.50 கோடியையும் டி.சி.எஸ். நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாக டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: TCS offer three month salary for employee in advance

Leave a Reply