பள்ளி மாணவர்களை அடிக்கவும் திட்டவும் திடீரென தடைவிதித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாமதமாக பள்ளிக்கு வருவது, வீட்டுப்பாடம் எழுதாமல் இருப்பது, சரியாக படிக்கமல் இருப்பது, மாணவர்கள் மத்தியில் வகுப்பில் பேசிக்கொண்டிருபது போன்ற தவறுகள் செய்யும் மாணவர்களை அடிக்கவோ அல்லது பலரது முன்னிலையில் திட்டவோ கூடாது என்றும், அவர்களுக்கு தண்டனை என்ற பெயரில் செங்கற்களை முதுகில் வைத்தல் போன்ற தண்டனைகள் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு சில கடுமையான தண்டனைகள் கொடுக்கும்போது அவர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுளது. இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது..