உதவி பேராசிரியர் பணி நியமன பட்டியல் அடுத்தமாதம் வெளிவரும்

உதவி பேராசிரியர் பணி நியமன பட்டியல் அடுத்த மாதம் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக 1093 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. எனவே அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி தகுதி அடிப்படையில், கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் பணி சென்னையில் கடந்த 25-ந்தேதி முதல் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்லூரி, அரசு காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் ஆண்கள் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு படிப்பிற்கும் ஒவ்வொரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. உதாரணமாக பிஎச்.டி. படித்திருந்தால் 9 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதுபோல எம்.பில்.படித்திருந்தால் 1 மதிப்பெண் உண்டு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகள் அனைத்தும் நேர்மையான முறையில் வெளிப்படையாக நடக்கின்றன. மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே இந்த வாரியம் செயல்படுகிறது.
சான்றிதழ் சரிபார்க்கவருபவர்கள் விதிமுறைகளை சரியாக படித்து பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் யாரும் சரியாக மதிப்பெண் வழங்கவில்லை என்று கவலைப்படவேண்டாம்.
மதிப்பெண்ணில் வித்தியாசம் இருந்தால் எது சரியான மதிப்பெண் என்று சரிபார்க்கப்பட்டு அதன்பின்னர்தான் பணிநியமனத்திற்கு ஆட்களை தேர்வு செய்வோம். எந்த வித பிழையும் நடக்க முடியாது.

எனவே சான்றிதழ் சரிபார்க்க வருபவர்கள் யாரும் பயப்படதேவையில்லை என்று விபுநய்யர் தெரிவித்தார்.

Leave a Reply