பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்திருக்க வேண்டும். சிவசேனா

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்திருக்க வேண்டும். சிவசேனா

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடியிருக்க கூடாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் நமது கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்கள். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதற்காக டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தும், கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை கொளுத்தியும் துக்கம் கடைப்பிடித்த மக்கள் அதேநாளில் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதை வீதிக்கு வந்து கொண்டாடி இருக்க வேண்டும்.

டெலிவிஷன் பெட்டியை உடைப்பதற்கு பதிலாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை நாட்டு மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் காஷ்மீரில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply