தாமதமாகும் மெட்ரோ ரயிலில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தடங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ இரயில்‌ போக்குவரத்து சிமிக்கையில்‌ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு வழித்தடங்களிலும்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ சென்று வருவதில்‌ சிறு தாமதம்‌ ஏற்படுகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதன்‌ காரணமாக நெரிசல்மிகு நேரத்திலும்‌ இரண்டு வழித்தடங்களில்‌ செல்லும்‌ மெட்ரோ இரயில்கள்‌ 10 நிமிடத்திற்கு ஒரு முறை சற்று தாமதமாக இயக்கப்படும்‌.

மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகளுக்கு எந்தவித இடையூறும்‌ இல்லாத வகையில்‌ மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌. இந்த சிமிக்கை கோளாறு உடனடியாக சரிசெய்யும்‌ பணியில்‌ தொழில்நுட்ப வல்லுனர்கள்‌ ஈடுப்பட்டு வருகிறார்கள்‌. இந்த சிமிக்கை கோளாறு மாலை 4.30 மணியளவில்‌ ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக கண்டறிந்து அதனை சீர்‌ செய்யும்‌ பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மெட்ரோ பயணிகள்‌ தங்கள்‌ பயணத்தை வழக்கம்போல்‌ தொடரலாம்‌ என கேட்டுகொள்கிறோம்‌. மெட்ரோ இரயிலின்‌ 10 நிமிட தாமதத்திற்கு பயணிகள்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்‌. இந்த சிமிக்கை கோளாறு சரிசெய்த உடன்‌ மெட்ரோ இரயில்கள்‌ வழக்கம்போல்‌ இரு வழித்தடங்களிலும்‌ இயக்கப்படும்‌ என்பதை அன்புடன்‌ தெரிவித்துகொள்கிறோம்‌. இந்த தகவலை சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.