ராணுவத்தில் தொழில் நுட்ப பிரிவு சேர்க்கை

இந்திய நாட்டின் பாதுகாப்புப் படையில் டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் கோர்சுக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பிரிவில் மொத்தம் 85 காலி இடங்கள் உள்ளன.

வயது: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16 1/2 வயதுக்கு மேற்பட்டவராகவும், 19 1/2 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களுடன் படித்து இந்தப் பாடங்களில் குறைந்த பட்சம் 70 சதவிகித சராசரி மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

3 ஆண்டு பயிற்சிக்காலத்தை முடித்தவர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். 4வது ஆண்டு பயிற்சி முடிந்த பின்னர் இந்திய ராணுவத்தில் லெப்டினண்ட் ரேங்கில் பணி அமர்த்தப்படுவார்கள்.

தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சர்வீசஸ் செலக்சன் போர்டு நேர்காணல்கள் போபால், பெங்களூரு மற்றும் அலகாபாத் ஆகிய மையங்களில் நடத்தப்படும். 5 நாட்கள் தங்கி நடத்தப்படும்
தேர்ச்சியின் போது உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். மொத்தம் ஐந்து ஆண்டு கால பயிற்சிகளைக் கொண்ட பதவியாகும். .

விண்ணப்பிக்கும் முறை: இந்திய ராணுவத்தின் டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் கோர்சுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 29.11.2013

முழு விபரங்களை அறிய :
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_38_1314c.pdf

Leave a Reply