உ.பியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம். அகிலேஷ் அரசு கலைக்கப்படுமா?

10-badaun-IndiaInk-tmagArticleஉத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஐ.நா. சபை தலைவர் பான் கீ மூன் அவர்களே இந்த சம்பவத்தை கண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மீண்டும் ஒரு 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, உடனடியாக முதல்வர் அகிலேஷ் யாதவ்வை டெல்லி வருமாறு உத்தரவிட்டுள்ளது.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை உத்தரபிரதேச முதல்வர் டெல்லியில் சந்தித்து பேசவுள்ளார். முதல்வரின் பதில் பிரதமருக்கு திருப்தி இல்லையென்றால் உ.பி. அரசு கலைக்கப்படும் அபாயம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இன்று கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோர்கள், இதுகுறித்து நேரிடையாக புகார் அளிக்க பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அணுக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் உத்தரபிரதேச அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply