இங்கிலாந்து நாட்டு பள்ளி ஒன்றில் பாலியல் சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு விளக்கமாக பதிலளித்த 14 வயது மாணவியை பள்ளி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சின்ன வயதிலேயே பாலியல் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தெரிந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் அந்த மாணவி மீது குற்றம் சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் பாலியல் சம்பந்தப்பட்ட சில கேள்விகள் கேட்கப்பட்ட்ன. ஆணுறை அணிந்து கொள்ளாத ஒரு ஆண்மகன் உன்னிடம் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பி சில காரணங்களை கூறினால் அந்த காரணங்களை நீ ஏற்றுக் கொள்வாயா?என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த மாணவி, ஆணுறை அணியாமல் என்னுடன் உறவு வைத்து கொள்வதற்கு பதிலாக உன்னுடனே உறவு வைத்துக் கொள்’ என்று எழுதியிருந்தார்.
மேலும் ஆணுறை அணியாமல் உறவு வைத்து கொள்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வரக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கேட்கப்பட்ட கேளவிகள் அனைத்திற்கும் சரியான, அதே நேரத்தில் நக்கலான விளக்கத்தை அவர் பதிலாக எழுதியிருந்தார். அவர் எழுதிய காரணங்கள் அனைத்தும் நியாயமானதாக இருந்தாலும், இந்த சிறிய வயதிலேயே செக்ஸ் குறித்து இவ்வளவு விஷயங்கள் தெரிந்துள்ள மாணவியை தங்கள் பள்ளியில் வைத்திருந்தால் மற்ற மாணவர்களுக்கு பிரச்சனை என கருதிய பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டது.