கண்ணின் அருகே முளைத்த பல். சீன பெண்ணுக்கு விசித்திர நோய்
சீனப்பெண் ஒருவருக்கு கண்ணிற்கு கிழே மிக அருகில் பல் ஒன்று முளைத்ததால் வலியால் துடித்ததாகவும், அவருக்கு சர்ஜரி செய்து அந்த பல் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கண்ணிற்கு கீழே பல் முளைப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் உள்ள Guangzhou என்ற பகுதியில் வாழும் 28 வயது பெண் Cao Fang. இவருக்கு சமீபகாலமாக சாப்பிடும்போது முகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த வலி அதிகமாகியதால், அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.
இவரை பரிசோதித்த டாக்டர் எக்ஸ்ரே மூலம் இவருக்கு கண்ணின் கீழே மிக அருகில் ஒரு பல் முளைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வலிக்கு இதுவே காரணம் என்று தெரிய வந்ததால் உடனடியாக அந்த பல் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. தற்போது அந்த பெண் குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் அவருக்கு சர்ஜரி செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.