150 மைல்கள் வேகத்தில் அடித்த புழுதிப்புயல். ஈரான் தலைநகரம் ஸ்தம்பித்தது.

[carousel ids=”34930,34929,34927,34928,34926,34925,34924,34923,34922,34921,34920″]

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று மிகப்பயங்கரமான புழுதிப்புயல் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புழுதிப்புயலில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த புழுதிப்புயலால் வானம் இருண்டு சூரியனே தெரியாத அளவுக்கு மறைந்துவிட்டது. மேகக்கூட்டங்களுடன் கலந்து வந்த இந்த புழுதிப்புயல் சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் கார்களை புரட்டிப்போட்டது. இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உருண்டு விழுந்தன்.

டெஹ்ரானில் இருந்து கிளம்பவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.;குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 50000 வீடுகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மின்சார கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் அதை சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது

Leave a Reply