கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் நிதிஷ்குமாருக்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் பிரிட்டன் நிறுவனம் தங்களுடைய அரசியல் பலனுக்காக ஃபேஸ்புக்கின் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்று தந்ததாக தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து மட்டுமின்றி அதன் பங்குகள் படுபாதாளத்தை நோக்கி சரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் நம் நாட்டிலும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் ஈடுபட்டால் மத்திய அரசு சகித்துக்கொள்ளாது என சமீபத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தொடர்பு இருக்கின்றது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சி தலைவரான கே.சி.தியாகியின் மகன் அமரேஷ் தியாகி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவர்கள் மூலமாக ஆட்சியை பிடித்துள்ளனர். எனவே, பிரதமர் மோடியும், முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இந்த விஷயத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tejaaswi attacks Nitish on cambridge analytics issue