தெலுங்கனா:பள்ளிப்பேருந்து மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 21 பேர் பலி. நெஞ்சை உலுக்கும் படங்கள்.

[carousel ids=”38015,38016,38017,38018,38019,38020,38021,38022,38023,38024″]

பள்ளி பேருந்து ஒன்றின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியாகியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், மாசாய்பேட்டை என்ற இடத்தில், இன்று காலை 40 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து ஒன்று, ஆளில்லா லெவல் கிராசிங் ஒன்றை கடக்க முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்..

பள்ளி பேருந்து மீது மோதிய ரயில் செகந்திராபாத்தில் இருந்து நான்டெட்டிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.  இந்த பயங்கர விபத்தில் பேருந்து ஓட்டுனரும், 20 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர் ஹரிஷ் ராவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  தீயணைப்பு படையினர்கள் மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாசாய்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் மேலும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெலுங்கானா மாநில டிஐஜி என்.சூர்யநாராயணா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1z6wWHO” standard=”http://www.youtube.com/v/iSs2Dgwn-G4?fs=1″ vars=”ytid=iSs2Dgwn-G4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3209″ /]

Leave a Reply