ஐதராபாத் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடம். முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு.

ksrஆந்திர மாநிலத்திலிருந்து சமீபத்தில் பிரிந்த தெலங்கானா, தலைநகர் ஐதராபாத் நகரை மிக அழகாகவும், ஆடம்பரம் மிக்க புதிய கட்டிடங்கள் உள்ள நகரமாகவும் மாற்ற புதிய திட்டங்களை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஐதாராபாத் ஹுசைன் சாகர் ஏரியைச் சுற்றிலும் 40 முதல் 60 கட்டிடங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது.

மேலும் சஞ்சீவய்யா பூங்கா அமைந்துள்ள இடத்தில் உலகின் மிக உயரமான கட்டிடத்தைக் கட்ட அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது துயாப் நாட்டில் உள்ள 828 மீட்டர் உயரம் கொண்ட உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமான கட்டிடம் அமைக்க தெலுங்கானா மாநிலம் முடிவு செய்துள்ளது.

இதேபோல் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது மாநிலத்திற்கு புதிய தலைநகரை வடிவமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர்  விஜயவாடா-குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரையின் இரு புறமும் புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இரண்டு மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தலைநகரை அழகுபடுத்துவதில் ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply